யாழில் ஆரம்பமாகியுள்ள 14 வது சர்வதேச வர்த்தக சந்தை
யாழ்ப்பாணத்தில்14 வது சர்வதேச வர்த்தக சந்தை இன்று வெள்ளிக்கிழமை (19) ஆரம்பமாகியுள்ளது. குறித்த வர்த்தக சந்தையானது யாழ்ப்பாணம் முற்றவெளியிலே காலை 10:30 மணிக்கு ஆரம்பமானது.
இந்த வர்த்தக கண்காட்சி நாளை(20) மற்றும் நாளை மறுதினம்(21) நடைபெறவுள்ளது. ஆரம்ப நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட பீடாதிபதி ந.கெங்காதரன், யாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மன்றத்தினர், இந்திய துனைத் தூதரக அதிகாரிகள் அனுசரணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.