Welcome to Jettamil

அண்ணாமலை டில்லிக்கு காவடித் தூக்கும் அடிமை – சீமான் காட்டம்

Share

ஈழம் குறித்து பேசும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, டில்லிக்கு காவடித் தூக்கும் அடிமை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார்.

ஈழத்திற்காக எங்களுடன் பா.ஜ.க உடன் சேர்ந்து சீமான் போராடுவார் என அண்ணாமலை கூறியது குறித்து எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த சீமான்,

“அண்ணாமலை அவரே முதலாளி போல பேசி வருகிறார். அவர் டில்லிக்கு காவடித் தூக்கும் ஒரு அடிமை.

ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என அமித்ஷா, மோடி என்னிடம் கூற வேண்டும்.

8 வருடமாக ஈழத்தை பற்றி பேசாத பிரதமர் மோடி இப்போது பேசப் போகிறாரா?

 திடீரென தன்னுடன் வந்து சீமான் போராடுவார் என அண்ணாமலை கூறுகிறார்.

ஒருவேளை பா.ஜ.க – திமுக கூட்டணி அமைக்க முடிவெடுத்தால், அண்ணாமலையை மாற்றிவிட்டு வேறு தலைவரை நியமிப்பர். அவ்வளவுதான் அண்ணாமலையின் இருப்பு.

திடீரென அவருக்கு ஈழத்தின் மீது பாசம் வந்துள்ளது.

அவர் வேறெதும் செய்ய வேண்டாம்; விடுதலை புலிகள் மீதான தடையை மட்டும் நீக்குங்கள், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.” என்று கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை