Welcome to Jettamil

அமைச்சராக இல்லாத போதும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு இணைத் தலைமை தாங்கிய மகிந்த

Share

வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும், கலந்து கொண்டுள்ளார் என்பதை, அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை போராட்டங்களின் மீத வன்முறைகள் ஏவி விடப்பட்ட நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்ச விலகினார்.

இதையடுத்து, அவர் பாதுகாப்புக்காக திருகோணமலை கடற்படைத் தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

பின்னர் நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்ற மகிந்த ராஜபக்ச, தற்போது அமைச்சராக இல்லாவிட்டாலும், திங்கட்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோரின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது, என்று திங்கட்கிழமை நடந்த அமைச்சரவை கூட்ட முடிவுகளை அறிவிப்பதற்கான செய்தியாளர் சந்திப்பின் தொடக்கத்தில் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை