நாட்டில் மற்றுமொரு பேருந்து விபத்து: பலர் படுகாயம்
ஹொரனை – இரத்தினபுரி (Ratnapura) வீதியில் பேருந்து ஒன்று விபத்திற்குள்ளாகியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (16) ஹொரனை – இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்து லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் இடங்கொட மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





