பெலியத்தே படுகொலைச் சம்பவத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது
கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் இடம்பெற்ற ஐந்து பேரின் கொலைக்கு உதவிய நபரொருவர் நேற்று (04) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் ஹபராதுவ பிரதேசத்தில் வைத்து சந்தேக நபரை கைது செய்து பெலியத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 28 வயதுடைய ரத்கம, கட்டுடம்பே பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இவர் இச்சம்பவத்தில் 11வது சந்தேக நபர் ஆவார்.
கடந்த மாதம் 22ஆம் திகதி தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் பகுதியில் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.