Welcome to Jettamil

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி உயர்வு

Share

அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில், ரூபாவின் பெறுமதி வலுவடைந்து வருகின்றது.

நேற்றைய தினம் அரசாங்கத்தின் முக்கிய வங்கிகளில் ஒரு டொலரின் கொள்வனவு விலை 353 ரூபாவாக அமைந்ததுடன், அதன் விற்பனை விலை 363 ரூபா 30 சதமாக காணப்பட்டது.

இதேவேளை, ஒருசில தனியார் வணிக வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாவாக பதிவானது.

மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மூன்று தனியார் வங்கிகளுக்கு 400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற வசதியை வழங்குவதற்கு உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு அமைப்பு தீர்மானித்தது.

இந்த நாணய பரிமாற்ற வசதி ரூபாவின் பெறுமதி ஓரளவு ஸ்திரமடைவதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை