வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பாலத்தடியில் வைத்து பெண் ஒருவரின் சங்கிலி ஒன்று இன்றையதினம் அறுக்கப்பட்டது.
காரைநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீதியில் சென்றுகொண்டிருந்த போது இவ்வாறு சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை ஊடகவியலாளர் ஒருவர் தொடர்புகொண்டு வினவியவேளை சம்பவம் நிகழ்ந்தது உண்மை என்றும், முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட நிலையில் மேலதிக தகவல்கள் எவற்றையும் வழங்க முடியாது என்று கூறியுள்ளனர்.
வட்டுக்கோட்டை பொலிஸார் ஏற்கனவே பல விடயங்களை ஊடகங்களுக்கு வழங்காமல் மறைத்து பல அட்டூழியங்களில் ஈடுபட்ட நிலையில் அண்மையில் சித்தங்கேணி இளைஞனையும் கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் பொலிஸார் தொடர்ந்தும் ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுத்து வருகின்றனர்.