Wednesday, Feb 5, 2025

புட்டினுடன் சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்பின் அறிவிப்பு!

By Jet Tamil

புட்டினுடன் சந்திப்புக்கு ஏற்பாடு – ட்ரம்பின் அறிவிப்பு!

ரஷ்ய ஜனாதிபதியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளதாக, அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

putin

இந்த சந்திப்பின் திகதி மற்றும் இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், ஜனவரி 20 ஆம் தேதி பதவியேற்பதற்கு முன்பாகவே இந்த சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் மாத தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப், தனது ஜனாதிபதி பதவியை ஏற்றவுடன் உக்ரேனில் நடைபெற்றுவரும் போரை முடிவுக்கு கொண்டு வர பேசுவார்த்தைகள் தொடங்குவதாக உறுதியளித்தார்.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், உக்ரேனில் போரை முடிவுக்கு கொண்டு வர சாத்தியமான தீர்வுகள் பற்றி ட்ரம்புடன் பேச வேண்டுமென்று ஒரு சந்திப்பை கோரியிருந்தார். அதன்படி, இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2022 இல் தொடங்கிய ரஷ்ய படையெடுப்பு காரணமாக சிதைந்து போன உக்ரேனில் அமைதி நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகள் பற்றி ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளதால், அவர் புதிய உத்தியோகபூர்வ தீர்வுகளை முன்வைக்கலாம்.

அதே சமயம், ட்ரம்ப் பதவியேற்கும் போது, அமெரிக்கா உக்ரேனுக்கு அனுப்பிய இராணுவ உதவிகளையும், ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் நேட்டோவில் அமெரிக்காவின் ஈடுபாட்டையும் விமர்சித்தார்.

இந்நிலையில், 2022 முதல், $65 பில்லியனுக்கும் அதிகமான இராணுவ உதவியை வழங்கிய அமெரிக்கா, உக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளராக இருந்து வருகிறது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு