புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு பெப்ரவரி 12க்குள் வெளியிடப்படும்!
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், எதிர்வரும் பெப்ரவரி 10 மற்றும் 12 ஆம் திகதிகளுக்கு இடையில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
விடைத்தாள்களின் மதிப்பீடு பணி, கடந்த புதன்கிழமை (8) 64 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த பரீட்சை 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதியன்று நடைபெற்றது.
சிங்கள மொழியில் 244,092 மாணவர்களும், தமிழ் மொழியில் 79,787 மாணவர்களும், மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர்.