தீ வைக்கப்பட்ட அருண் சித்தாத்தின் கட்சி அலுவலகம்..!
யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள தாயக மக்கள் கட்சியின் காரியாலயம் மீது நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் தீ வைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாயக மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்தின் வதிவிடமும், கட்சியின் அலுவலகமும் ஒரே கட்டிடத்தில் இயங்கி வருகின்றன. நேற்று (13.01.2026) நள்ளிரவு 12.50 மணி அளவில், அடையாளம் காணப்படாத இருவர் பெற்றோல் ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் காரணமாகக் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










