வரலாற்றுச் சிறப்பு மிக்க ஈழத்து சபரி மலை ஐயப்பனின் தீர்த்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க கோண்டாவில் ஈழத்து சபரிமலை சபரிச ஜயப்பன் தேவஸ்தானத்தின் 10ஆம் நாள் தீர்த்தோற்சவம் நேற்று (15.12.2023) பக்திபூர்வமாக இடம்பெற்றது. இவ்வாலயத்தின் வருடாந்த கொடியேற்றம் 06.12.2023 அன்று இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிக்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்பன், மடசாமிக்கும், கருப்பானசாமி ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றன.
பின்னர் வசந்த மண்டபத்தில் அருள் பாலித்து விளங்கும் ஈழத்து சபரிமலை சபரீச ஐயப்னுக்கு தீபாராதனைகள் இடம்பெற்று, அங்கிருந்து எழுந்தருளிய எம்பெருமான் பீடத்தில் வீற்றிருந்து உள்வீதியுடாகவும், வெளி வீதியூடாகவும் வந்து தீர்த்தமாடினார்.
காவல்துறையினர் மக்களுக்கு விடுத்த முக்கிய அறிவிப்பு
ஆலயபிரதம குரு குருமாமணி கி.ஹரிஹரசுதச் சிவாச் சாரியரினால் கிரியைகள் நடாத்தி வைக்கப்பட்டன.