பச்சிலைப்பள்ளி பிரதேச சபை பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்!
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு பதின்மூன்று உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சபை அமர்வு சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் தலமையில் காலை 10:30 மணியளவில் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 2026 ம் ஆண்டிற்க்கான வரவு செலவு திட்டம் வாக்கெடுப்பிற்கு இடப்பட்டது. இதில் சமையின் பதின்மூன்று உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்த நிலையில் பாதீடு ஏகமனதாக நிறைவெற்றப்பட்டுள்ளது.
மண்ணிற்காக மரணித்த மாவீரர்களுக்கும், அதன்பால் கொல்லப்பட்ட மக்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டு சபை அமர்வு ஆரம்பமானது.
2026 ம் ஆண்டிற்க்கான பாதீடு தவிசாளரால் சமர்ப்பிக்கப்பட்டது. பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு மத்திய அரசின் ஒதுக்கீடுகள் குறைவாகவுள்ளதாக தெரிவித்த தவிசாளர், வடமாகாணத்தின் முதலாவது வரவு, செலவுத் திட்டமாக இது முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.
புதிய வரியாக சோலர் மின்சாரம் உற்பத்தி செய்பவர்களிடம் வரி அறவிடுவதாகவும், இப்பாதீட்டில் 142.2 மில்லியன் மொத்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,
அபிவிருத்தியோடு நின்றுவிடாது விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்ற இனம், சம்ஷ்டி அடிப்படையில் ஒரு தீர்வை பெற்றுக் கொள்வதற்காகவும் உழைக்கவேண்டும் என்றும், தமிழ் மக்களுக்காக அரசு தீர்வை முன்வைக்கும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.





