கடந்த மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் குடத்தனையை வந்தடைந்த மூவருக்கும் நேற்று பருத்தித்துறை நீதிமன்றிதினால் பிணை வழங்கப்பட்டுள்ளது
குறித்த மூவரும் யுத்த காலத்தில் இந்தியா தமிழ்நாட்டிற்கு புலம் பெயர்ந்து சென்று நீண்டகாலம் அங்கு வசித்து வந்த நிலையில் அங்கிருந்து படகுமூலம் தமது சொந்த ஊரான குடத்தனை பகுதிக்கு வந்தனர்.
இந்நிலையில் அவர்களை கைது செய்த பருத்தித்துறை பொலிசார் பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவர்களை விளக்கமறியலில் வைத்த பருத்தித்துறை நீதிமன்றம், நேற்றையதினம் தலா ஒரு இலட்சம் ஆட்பிணை மற்றும் வாராந்தம் பருத்தித்துறை காவல் நிலையத்தில் கையொப்பமிடப்படவேண்டும் ஏன்கின்ற நிபத்தனையில் பிணை வழங்கியது.