பசில் ராஜபக்ச தனது பதவி விலகல் தொடர்பில் இன்று இடம்பெறும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக இந்த வாரம் நாடாளுமன்ற பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும் என பசில் ராஜபக்ச அறிவித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நெலும் மாவத்தையில் அமைந்துள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சியின் தலைமையகத்தில் பசில் ராஜபக்ச கலந்துகொள்ளும் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை நடைபெறவுள்ளது. இதன் போது தனது பதவி விலகல் தொடர்பில் பசில் ராஜபக்ச கருத்து வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.