அமெரிக்காவின் மன்ஹாட்டனில் உள்ள புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவீதம் குணப்படுத்தியுள்ளனர்.
இந்த மருந்து 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் முற்றிலும் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர்.
அவர்களுக்கு, அனைத்து சோதனைகளிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து உடலில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை 6 மாதங்களுக்கு செலுத்தப்படும்.
பொதுவாக புற்றுநோய் செல்கள் உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதற்காக, முகமுடி போன்ற ஒரு படலத்தை கொண்டு மறைந்திருக்கும்.
இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்றுநோய் செல்களை கண்டறிய முடியாது.
ஆனால் இந்த மருந்து அந்த முகமூடியை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக புற்றுநோய் செல்களை அழிக்க வழி செய்கிறது.
இதனால் இயற்கையாக புற்றுநோய் செல்கள் அழிகின்றன.
டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை என்றும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.