Welcome to Jettamil

மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம் 

Share

இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தமது  பணிப்புறக்கணிப்பை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

மின்சார சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இந்நிலையில்  நேற்றிரவு ஜனாதிபதியுடன் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் கைவிட்டுள்ளது.

எனினும், தற்போது நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும்பு, கம்பஹா மற்றும் கண்டி மாவட்டங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ் மாவட்டத்திலும் பல பகுதிகளில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருந்தது.

இதேவேளை மின்சார விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை