பொலிஸாரின் பல தடைகளையும் மீறிய வகையில் கொட்டும் மழையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவடிமுன்மாரிய மாவீரர் துயிலும் இல்லத்தில் பொலிஸாரின் பல்வேறு தடைகளுக்கும் மத்தியில் மாவீரர் தின நிகழ்வு ஆயிரக்கணக்கான மக்கள் புடைசூழ உணர்வூபூர்வமாக நடைபெற்றது.
மழைக்கு மத்தியிலும் மாவீரரின் தாய் ஒருவர் பிரதான ஈகச்சுடர் ஏற்ற ஏனையவர்கள் ஈகச்சுடர் ஏற்றி அக வணக்கம் செலுத்தினார்கள்.