ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா புகை குண்டுகளால் தாக்கப்பட்டார்.
வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடி துறைமுகத்தில் இன்று (15) இடம்பெற்ற தாக்குதலில் பிரதமருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
துறைமுகத்தில் கண்காணிப்புச் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு உரை நிகழ்த்தத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஜப்பானிய பாதுகாப்புப் படையினரால் இருபது முதல் முப்பத்தேழு வயதுக்கு இடைப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயும் கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.