Welcome to Jettamil

மசாஜ் நிலையத்தின் போர்வையில் விபச்சார விடுதி முற்றுகை – 9 தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கைது!

Share

மசாஜ் நிலையத்தின் போர்வையில் விபச்சார விடுதி முற்றுகை – 9 தாய்லாந்து பெண்கள் உட்பட 10 பேர் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் சூட்சுமமான முறையில் நடத்தப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை நேற்று இரவு பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 25 முதல் 41 வயதுக்குட்பட்ட 09 தாய்லாந்து நாட்டுப் பெண்கள் மற்றும் விடுதியை நிர்வகித்து வந்த ஜா-எல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த வெளிநாட்டுப் பெண்கள் சுற்றுலா வீசாவில் இலங்கைக்கு வந்து இவ்வாறான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டனரா என்பது குறித்தும், இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தின் பின்னணியில் உள்ள ஏனைய நபர்கள் குறித்தும் கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை