மண்ணுக்குள் புதையுண்ட பேருந்துகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன
மண்சரிவில் சிக்கி முழுமையாக மண்ணுக்குள் புதைந்திருந்த ஒரு பேருந்து, அப்பகுதி முழுவதுமாக மண் மற்றும் குப்பைகள் அகற்றப்பட்ட பின்னர், வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.
பேருந்து முழுவதுமாக மண்ணுக்குள் மூழ்கியிருந்ததால், அது வெளியே தெரியாமல் இருந்தது. எவ்வாறாயினும், மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, குறித்த பேருந்து நேற்று மீட்கப்பட்டதுடன், அதன் இயந்திரத்தை வெற்றிகரமாகத் தொடங்கி இயக்க முடிந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது, மாஸ்பன்ன மண்சரிவில் ஏற்பட்ட பாதிப்புகளை நீக்குவதில் அடைந்த முக்கிய முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.





