பிரேசிலில் சீரற்ற காலநிலை காரணமாக சுதந்திர தேவி சிலை சரிந்து வீழ்ந்தது
பிரேசிலின் குவைபா (Guaíba) நகரில் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக, அங்கு நிறுவப்பட்டிருந்த சுதந்திர தேவி சிலையின் மாதிரி வடிவம் (Replica Statue of Liberty) சரிந்து விழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சிலை 1900 ஆண்டுகளின் ஆரம்பப் பகுதியில் நிறுவப்பட்டதுடன், ஃப்ரீமேசன்னரி (Freemasonry) அமைப்புடன் தொடர்புடையது எனக் கூறப்படுகிறது. வரலாற்றுக் கௌரவம் வாய்ந்த இந்தச் சிலைபலத்த காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் சரிந்துள்ளது.
இந்தச் சிலை சரிந்ததையடுத்து, அப்பகுதி அதிகாரிகள் நிலைமையைச் சீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரேசிலில் நிலவும் சீரற்ற காலநிலையின் தாக்கத்தை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டியுள்ளது.





