மறைந்த சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர் மிகைல் கோர்பச்சேவின் இறுதிச் சடங்குகளை அரசுடமையாக நடத்துவதில்லை என அதிபர் விளாடிமிர் புடின் முடிவு செய்துள்ளார்.
அத்துடன், அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்க முடியாது எனவும் ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
1985 முதல் 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கடைசித் தலைவராக இருந்த மிகைல் கோர்பச்சேவ், நீண்ட கால நோய்க்குப் பிறகு தனது 91வது வயதில் சமீபத்தில் காலமானார்.