இந்திய இராணுவத்தால் நிர்மானிக்கப்பட்ட மத்திய – ஊவா மாகாண பெய்லி பாலம் இன்று திறந்து வைப்பு
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் இந்தியாவின் உதவித் திட்டத்தின் கீழ், மற்றுமொரு சாதனை மைல்கல்லாகப் புதிய பெய்லி பாலம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இன்று (ஜனவரி 11, 2026) இந்தப் பாலம் உத்தியோகபூர்வமாகப் போக்குவரத்துக்காக அர்ப்பணிக்கப்பட்டது.
கண்டி – ராகலை வீதியில் (Kandy-Ragala Road) அமைந்துள்ள B-492 நெடுஞ்சாலையில் இந்தப் பாலம் நிறுவப்பட்டுள்ளது.
சுமார் 100 அடி நீளமான இந்தப் பாலம், சூறாவளியால் சேதமடைந்த பழைய பாலத்திற்கு மாற்றீடாக அமைக்கப்பட்டது.
இந்தப் பாலத்தின் மூலம் மத்திய மாகாணத்தையும் ஊவா மாகாணத்தையும் இணைக்கும் மிக முக்கியமான போக்குவரத்துப் பாதை மீளவும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.








