Welcome to Jettamil

தமிழக ஆளுநர் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

Share

தமிழக ஆளுநர் ரவியை,  முதல்வர் ஸ்டாலின்  நேற்று சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், நடந்த இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன், தங்கம் தென்னரசு ஆகியோரும் உடன் இருந்தனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் ஆளுநர் ரவியை, நேரில் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று கேட்டு கொண்டார் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தமைக்கு ஆளுநனரிடம், முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை