Welcome to Jettamil

மீண்டும் மூடப்படும் ஆபத்தில் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு ஆலை

Share

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படும் என, பெட்ரோலிய தொழிற்சங்க கூட்டமைப்பு சுத்திகரிப்பு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பெட்ரோலிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித,

“சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு,  90 ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெயை கிடைத்த பின்னர் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.

இந்த மசகு எண்ணெய் 15 தொடக்கம் 20 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்.

இந்த கையிருப்பின் பின்னரும், சுத்திகரிப்பு நிலையம் அதன் செயல்பாடுகளைத் தொடர வேண்டுமானால், இலங்கை மற்றொரு மசகு எண்ணெய் தொகுதியைப் பெற வேண்டும்.

எனினும், அத்தகைய கையிருப்பைப் பெறுவதற்கான ஒப்பந்தம் இன்னும் கையெழுத்திடப்படவில்லை.

மசகு எண்ணெய் ஏற்றி வரும் கப்பல் குறைந்தது அடுத்த 30 நாட்களுக்கு நாட்டிற்கு வராது.

எனவே, பெறப்பட்ட 90ஆயிரம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டவுடன் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை மீண்டும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

அவ்வாறு இடைநிறுத்தப்படும் போது, தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதன் மூலம் நாட்டுக்கு பல பில்லியன் ரூபா நட்டம் ஏற்படும் என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை