Welcome to Jettamil

100 நாட்களைக் கடந்த உக்ரைன் போர்

Share

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நேற்றுடன் 100 நாட்களை கடந்துள்ளது.

பிப்ரவரி 24ஆம் திகதி ரஷ்ய ஜனாதிபதி  விளாடிமிர் புட்டின் தனது போர்ப்படைகளை அனுப்பி உக்ரைன் மீதான போரைத் தொடங்கி வைத்தார்.

நேற்றுடன் 100 நாட்களை கடந்துள்ள இந்தப் போர், ஐரோப்பாவில் நெடுங்காலமாக இடம்பெற்றுள்ள போர்களில் மிக மோசமானது என்று நம்பப்படுகிறது.

உலகையே உலுக்கியுள்ள உக்ரைனியப் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

கிட்டத்தட்ட 7 மில்லியன் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறியுள்ளனர்.

உக்ரைனியப் போரால் அந்நாட்டின் நகரங்கள் அழிக்கப்பட்டிருக்கும் அதேவேளை உலகப் பொருளாதாரமும்  பலவீனம் அடைந்திருக்கிறது.

அதேவேளை, உக்ரைனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy), தமது படைவீரர்களில் 60 முதல் 100 பேர் வரை  போர்க்களத்தில் நாள் தோறும் மரணமடைவதாகக் கூறியுள்ளார்.

நாள் ஒன்றுக்கு மேலும் 500 வீரர்கள் காயமடைவதாகவும் அவர் குறிப்பிட்டார். போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷ்யப் படைவீரர்கள் உயிரிழந்தனர் என்று  உக்ரைனிய அரசாங்கம் கடந்த வாரம் தெரிவித்தது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை