இலங்கை வாழ் கிறிஸ்தவர்கள் இன்று புனித பெரிய வெள்ளி கூட்டுத்திருப்பலியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவ் கூட்டுத்திருப்பலியினை முன்னிட்டு யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிறிஸ்தவ தேவாலயங்களில் கூட்டுத்திருப்பலி ஆராதனைகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் வரலாற்று சிறப்புமிக்க யாழ். மரியன்னை பேராலயத்தில் புனித வெள்ளி கூட்டுத்திருப்பலி இன்று காலை இடம்பெற்றது.