Welcome to Jettamil

மூன்று நாட்களாகியும் ஜோன்ஸ்டனைத் தேடுகிறது சிஐடி குழுக்கள்

Share

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டு மூன்று நாட்கள் கடந்துள்ள போதிலும், முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்னமும் கைது செய்யப்படவில்லை.

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் திணைக்களக் குழுக்கள் தற்போது செயற்பட்டு வருகின்ற போதிலும், இதுவரையில் அவரை கைது செய்ய முடியவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பில் மே 9ஆம் திகதி பொதுஜன பெரமுன குழுவினரால் அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம மற்றும் மேலும் இருவர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக ஜூன் 1 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

இதையடுத்து,  ஜூன் 2 ஆம் திகதி அவரைக் கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை