எந்தவொரு தேர்தலை நடத்தக் கூடிய நிலையிலும், நாடு தற்போது இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின், என்டிடிவிக்கு அளித்த செவ்வியிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இதனைக் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 21வது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்.
ஆனால் அது எந்த வாக்கெடுப்புக்கும் அழைப்பு விடுக்காது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு, பொதுவாக்கெடுப்பு ஒன்று நடத்த வேண்டியிருக்கும். எனினும் தற்போது அது சாத்தியமில்லை.
தேர்தலை நடத்துவதற்கு முன்னர், தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.