கொழும்பில் உள்ள முக்கியமான பல இடங்களை அதி உயர் பாதுகாப்பு வலயங்களாக பிரகடனப்படுத்தி, வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இரத்துச் செய்துள்ளார்.
1955 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க அரச இரகசியச் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ், கடந்த செப்ரெம்பர் 23 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதி உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையே இரத்துச் செய்வதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நேற்று வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் பல இடங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டமைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்த நிலையிலும், இந்த அறிவிப்பை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையிலும், வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் ரத்துச் செய்துள்ளது.





