Welcome to Jettamil

மதுவினால் ஏற்பட்ட முரண்பாட்டினால் கோப்பாயில் மனைவி தனக்கு தானே தீமூட்டி மரணம்!

Share

மதுவினால் ஏற்பட்ட முரண்பாட்டினால் கோப்பாயில் மனைவி தனக்கு தானே தீமூட்டி மரணம்!

கணவனை மது அருந்த வேண்டாம் என கண்டித்த நிலையில் கணவன் மது அருந்தியதால் மனைவி தனக்கு தானே தீ மூட்டி உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கோப்பாய் மத்தி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் தர்சினி (வயது 41) என்ற குடும்பப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் மதுப் பழக்கம் உடையவர். இந்நிலையில் அவரை மது அருந்த வேண்டாம் என மனைவி கண்டித்துள்ளார். அவர் தொடர்ந்தும் மது அருந்தியதால் கடந்த 7ஆம் திகதி குறித்த பெண் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீயை பற்ற வைத்துள்ளார்.

இதன்போது அவரை காப்பாற்றிய ஊரவர்கள் யாழ்ப்மாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை