Welcome to Jettamil

இந்தியாவில் நெடுஞ்சாலையொன்றில் கோரம் : வீதியில் சிதறி ஒட்டி கிடக்கும் மனித உடல்

Share

இந்தியாவில் நெடுஞ்சாலையொன்றில் கோரம் : வீதியில் சிதறி ஒட்டி கிடக்கும் மனித உடல்

இந்தியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்த சர்ச்சைக்குரிய சம்பவம் குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

காவல்துறை அதிகாரிகள் குழு எப்படி இறந்த நபரின் உடல் பாகங்களை சவள் கொண்டு சேகரிக்கிறது என்பது தொடர்பான சம்பவம் காட்டுகிறது.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள நெடுஞ்சாலையில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. சுமார் 500 மீற்றர் தூரத்திற்கு நெடுஞ்சாலையில் ஒரு சடலத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்ததாகவும், தார்ப் பாதையில் சிக்கிக் கொண்டதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரவு முழுவதும் பல வாகனங்கள் சடலத்தின் மீது செலுத்தப்பட்டதன் காரணமாக சடலத்தின் பாகங்கள் நெடுஞ்சாலையில் ஒட்டிக்கொண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இறந்தவர் யாரென்று அடையாளம் காண முடியாத நிலையில் உடல் உறுப்புகள் பல இடங்களில் சிதறிக் கிடப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சாலையில் உள்ள உடல் பாகங்கள் சவளைப் பயன்படுத்தி எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதைக் காட்டும் காட்சிகள் பகிரப்பட்டதன் மூலம், மிகவும் உணர்ச்சிகரமான சம்பவம் குறித்து நிறைய விவாதங்கள் நடந்துள்ளன.

அந்த பகுதியில் கடும் பனிமூட்டம் மற்றும் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் சாரதிகள் வாகனம் ஓட்டியதால் சடலத்தின் மீது வாகனம் ஏறி உடல் பாகங்கள் வீதியில் ஓட்டி இருக்கலாம் என அந்நாட்டு அதிகாரிகள் கருதுகின்றனர்.

உயிரிழந்த நபரின் உறுப்புகளில் ஒரு விரல் மாத்திரமே காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட கைரேகைகளைப் பயன்படுத்தி உயிரிழந்த நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்த அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை