Welcome to Jettamil

மரணப் படுக்கையிலிருந்த நாட்டை மீட்டெடுத்த பெருமை ஜனாதிபதி ரணிலையே சாரும் – அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ

Share

உலக நாடுகள் இலங்கையிடம் பாடம் கற்றுக் கொள்வதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது மரணப் படுக்கையிலிருந்த நாட்டை மீட்டு எடுத்த பெருமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சாரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து அடைந்த நாடு 18 மாதங்களில் எவ்வாறு மீண்டது என்பது குறித்து உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் எம்மவர் திறமைகளுக்கு நாம் மதிப்பளிப்பதில்லை என்றும், கிரேக்கம், லெபனான் மற்றும் சிம்பாப்வே போன்ற நாடுகள் தொடர்ந்தும் வங்குரோத்து நிலையில் மூழ்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை