தபால்காரர்கள் பற்றாக்குறை – நாடு முழுவதும் கடித விநியோகம் பாதிப்பு
நாட்டின் சில பகுதிகளில் தபால்காரர்கள் பற்றாக்குறையால் கடிதங்களின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. தபால்காரர்கள் பற்றாக்குறையினால் சில மாகாணங்களில் கடித விநியோகம் ஒரு நாள் தாமதமாகி வருவதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார்.
தபால் திணைக்களத்தில் தபால்காரர்கள் உட்பட கிட்டத்தட்ட 2,000 தபால் ஊழியர்களின் பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பல உத்தியோகத்தர்களின் ஓய்வு மற்றும் ஆட்சேர்ப்பு இன்மையினால் சில சேவைகளை பேணுவதில் தபால் திணைக்களம் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.