Friday, Jan 17, 2025

கனடா – ஒன்றாரியோ அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

By jettamil

கனடா – ஒன்றாரியோ அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடா – ஒன்றாரியோ மாகாண அரசாங்கத்திற்கு மத்திய அரசாங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மலிவுவிலை வீடமைப்புத் திட்டங்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் நிதியீட்டம் செய்யப்படாது என மத்திய அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண அரசாங்கம் வீடமைப்பு திட்டத்தை உரிய திட்டமிடலுடன் முன்னெடுக்கத் தவறியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த விடயத்தை மத்திய அரசாங்கத்தின் வீடமைப்புத்துறை அமைச்சர் சேன் ப்றேசர் தெரிவித்துள்ளார்.

ஏனைய அனைத்து மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களை விடவும் ஒன்றாரியோ பின்னிலை வகிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உடன்படிக்கையின் அடிப்படையில் மூன்றாண்டு காலப் பகுதியில் 94 வீதமான வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு