பிரான்சில் பட்டப்பகலில் அதிரடித் திருட்டு: பேருந்திலிருந்து பொதிகளைச் சூறையாடிய கும்பல்!
பிரான்ஸின் கிரெனோபில் (Grenoble) பகுதியில், பட்டப்பகலில் பேருந்து ஒன்று நிறுத்தப்பட்டிருந்த போது, வட ஆபிரிக்கக் கும்பல் ஒன்று பேருந்தின் கீழ்ப்பகுதியில் உள்ள பொதி அறையை (Luggage Compartment) பலவந்தமாகத் திறந்து, பயணிகளின் உடமைகளைத் திருடிச் செல்லும் காணொளி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், எவ்வித அச்சமுமின்றி அந்தக் கும்பல், ஒரு நிமிடத்திற்குள் பல பெட்டிகளைச் சூறையாடிக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இத்தகைய சம்பவங்கள் பிரான்ஸ் மட்டுமன்றி ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டி மக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.




