சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில், நாட்டுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பதை அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான கட்டமைப்பு சீர்திருத்த வேலைத்திட்டத்தில் கவனம் செலுத்திய சாகல ரத்நாயக்க, இந்த வேலைத்திட்டம் நிதி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதல்ல, இலங்கையின் மீட்சி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியமான நல்லிணக்க செயல்முறை போன்ற விடயங்களையும் உள்ளடக்கியதாக தெரிவித்தார்.