யாழ். பிரதேச செயலகத்தின் எற்பாட்டில் இஸ்லாமிய மக்களின் நோன்புதிறக்கும் இப்தார் நிகழ்வு 11.04.2023 நேற்று யாழ். பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் யாழ். பிரதேச செயலாளர் சதாசிவம் சுதர்சன் தலைமையில் நடைபெற்றது.
நோன்பின் முக்கியத்துவத்தின் நெறிப்படுத்தும் வகையில் சிறப்புரைகளும் இடம்பெற்றன. அதனை ரம்ழான் பயிற்சி பண்பாட்டு பாசறை மெலளவி A.S.அஜ்மல் நிகழ்த்தினார். ரம்ழான் சுகவாழ்வு என்னும் கருப்பொருளில் சிறப்புரையினை பைசர் மதனி நிகழ்த்தினார்.
இவ் நிகழ்வு பிரதம அதிதியாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்தார்.
இதில் யாழ். பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமசேவையாளர்களில் உள்ள இஸ்லாமியர்கள், பதவிநிலை மெளலவிமார்கள், கிராமசேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மதத்தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.