1089 சமுர்த்தி வங்கிகளை அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை யாரும் தவறாகப் புரிந்து கொள்ள முடியாது என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், சில சமுர்த்தி தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே தீர்வுகளை வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டத்தை எவராலும் சீர்குலைக்க முடியாது என அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி உற்பத்தி உதவி அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கித்சிறி கமகே கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.