டீசல் விலை 600 ரூபாவை எட்டும்! – தயாசிறி ஜயசேகரவின் திடுக்கிடும் தகவல்!
இலங்கையில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு 550 முதல் 600 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7-ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ள டீசல் கப்பலின் அதிகப்படியான கொள்வனவு விலையே இந்த பாரிய விலை உயர்வுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மீண்டும் நீண்டுள்ள எரிபொருள் வரிசைகளுக்கு அரசாங்கத்தின் முறையற்ற நிர்வாகமே காரணம் என அவர் கடுமையாகக் குற்றம் சுமத்தியுள்ளார். எரிபொருள் கொள்வனவுக்கான நடவடிக்கைகளை உரிய காலத்தில் திட்டமிட அரசாங்கம் தவறியுள்ளமையே இந்த நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
டீசல் விலை இவ்வாறு சடுதியாக உயரும் பட்சத்தில், போக்குவரத்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையின் இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.




