Welcome to Jettamil

வழிபாடுகளை மேற்கொள்ள இடையூறு ஏற்படுத்தக்கூடாது – டக்ளஸ்

Share

ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

மறவன்புலவு மேற்கு சிதம்பர சித்தி விநாயகர் ஆலயம், பரிபாலன சபையினரால் பூட்டப்பட்டுள்ளமை தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு பிரதேச மக்களினால் கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த விவகாரத்தினை சுமூகமாக தீர்க்கும் நோக்கிலான கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, சம்மந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், ஒரு வார காலத்தினுள் ஆலய பரிபாலன சபையினருடன் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.

மேலும் பிரதேச மக்கள் விரும்பிய நேரத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை