வைத்தியர் அர்ச்சுனா வெற்றி – அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி!
யாழில் போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா, ஒரு ஆசனத்தைப் பெறுவதற்குப் போதுமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இரண்டு ஆசனங்களையும் வென்றுள்ளதாகவும், தமிழரசுக்கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி, அ.இ.த.கா. மற்றும் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சைக் குழு ஒவ்வொரு ஆசனத்திற்கும் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.
வைத்தியர் அர்ச்சுனா தலைமையிலான சுயேட்சைக்குழு மொத்தம் 27,855 வாக்குகளைப் பெற்றதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் உள்ளன.
சங்குச் சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைக் காட்டிலும் அவர் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்.
யாழ் தேர்தல் களத்தில், வைத்தியர் அர்ச்சுனா அதிக சர்ச்சைகளை உருவாக்கிய வேட்பாளராக இருப்பதால், பல அரசியல்வாதிகள் அவரை விமர்சித்துள்ளனர். இருந்தபோதிலும், யாழ் மக்கள் குறிப்பிட்ட அளவு வாக்குகளை வழங்கி அவரை வெற்றி அடையச் செய்தது குறிப்பிடத்தக்கது.