வாகனப் பதிவில் அதிரடி மாற்றம்: இனி ‘TIN’ இலக்கம் கட்டாயம்! மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை ஜனவரி 05 முதல் நாடு முழுவதும் அமுலுக்கு வந்துள்ளது.
வாகனங்களைப் பதிவு செய்யும் போதும், உரிமையை மாற்றும் போதும் புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை எண் அல்லது வணிகப் பதிவு எண்ணுடன், வரி செலுத்துவோர் அடையாள எண்ணையும் (TIN) தரவுத்தளத்தில் உள்ளிடுவது இனி கட்டாயமாகும்.
சாதாரண மக்களின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு, மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள், கை டிராக்டர்கள் மற்றும் டிராக்டர்கள், டிராக்டர் டிரெய்லர்கள் வாகனங்களுக்கு இந்த TIN இலக்க நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய வாகனங்களைத் தவிர ஏனைய சொகுசு வாகனங்கள், கார், வேன் மற்றும் பார ஊர்திகள் போன்ற அனைத்திற்கும் TIN இலக்கம் சமர்ப்பிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.





