அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டங்களினூடாக ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு வரியில்லா சலுகைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய பிரதமர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அடங்கிய அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.
அவ்வறிவிப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.