Welcome to Jettamil

ஆப்கானிஸ்தானில் இன்று (10) காலை மீண்டும் நிலநடுக்கம்

Share

இன்று (10) காலை 9.08 மணியளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

90 கிலோ மீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர் நிலநடுக்கம்

வறுமை மிகுந்து காணப்படும் நாடான ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஒக்டோபா் மாதம் 7ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா்

அதனையடுத்து ஒக்டோபர் 13, 15 மற்றும் நவம்பர் 21 ஆம் திகதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை