கண்டி – உடதும்பர பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.2 ஆகப் பதிவு!
கண்டி: கண்டி மாவட்டத்தின் உடதும்பர பகுதியில் இன்று (08.01.2026) மாலை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாகப் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று மாலை 5.05 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உடதும்பர – தேவஹந்தியா கிராமத்தைச் சூழவுள்ள பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இது ரிக்டர் அளவுகோளில் 2.2 ஆகப் பதிவாகியுள்ளது.
இது மிகவும் சிறிய அளவிலான நிலநடுக்கம் என்பதால், பொதுமக்கள் எவ்விதமான தேவையற்ற அச்சமோ அல்லது பீதியோ அடையத் தேவையில்லை எனப் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது. அனர்த்த நிலைமைகள் குறித்துத் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





