Welcome to Jettamil

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்ப்பு

Share

உள்ளூராட்சி தேர்தலை எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும், அதனை பிற்போடுவதில் தங்களுக்கு இணக்கம் இல்லை எனவும், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம்  செப்டம்பர் மாதத்துக்கு பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை மேற்கொள்ளும் அதிகாரம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு இணக்கம் இல்லை. அதனை நாங்கள் எதிர்க்கிறோம்.

மாகாணசபைகள் இன்று அதிகாரிகளின் கீழே செயற்படுகின்றன. மக்கள் பிரதிநிதிகள் இருக்க வேண்டிய இடங்களில் அதிகாரிகளை நியமித்து நிர்வகிப்பதை  ஆணைக்குழு ஏற்கவில்லை.

இன்று மாகாணசபை காணாமல் போயுள்ளது. அது காணாமல் ஆக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை