Welcome to Jettamil

மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படும் – இலங்கை மின்சார சபை அறிவிப்பு

Share

மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

நேற்று  நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இதனை தெரிவித்தார்.

இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையால் மாத்திரம் தீர்மானிக்க முடியாதென தெரிவித்துள்ள ரொஹான் செனவிரத்ன கட்டண அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுவருவதாகவும் கூறினார்.

இதேவேளை, மின்சார கட்டண திருத்தத்தின் போது தொழிற்சாலைகளுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை