Welcome to Jettamil

அவசர அனர்த்த எச்சரிக்கை: 30ஆம் திகதி வரை பாரிய ஆபத்து!

Share

அவசர அனர்த்த எச்சரிக்கை: 30ஆம் திகதி வரை பாரிய ஆபத்து!

இன்று திங்கட்கிழமை (நவம்பர் 24, 2025) மாலை 4.00 மணியளவில், நாகமுத்து பிரதீபராஜா அவர்களினால் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அவசர அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் தாழ்வு மண்டலம் காரணமாக எதிர்வரும் நவம்பர் 25 முதல் 30 வரை நாடு பாரிய வானிலை அனர்த்தத்தை எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கில் உள்ள காற்றுச் சுழற்சிகள் இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறும்.

இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, கிழக்கு கரையோரமாக நகர்ந்து வடக்கு மாகாணத்தை அண்மிக்கும்.

இது வடமாகாணத்தில் இருந்து விலகி வடக்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கனமழை பெய்யும்.

நவம்பர் 26 – 29: வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் மிகக் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

நவம்பர் 26 முதல் பல மாகாணங்களில் மணிக்கு 50-70 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்.

நாட்டின் அனைத்து மீனவர்களும் நாளை (நவம்பர் 25) முதல் நவம்பர் 30 வரை எக்காரணம் கொண்டும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.

வடக்கு, கிழக்கு விவசாயிகள் நவம்பர் 30 வரை உரம் இடல் அல்லது கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

ஏற்கனவே பல ஆறுகள் நிரம்பி வழிவதால், தாழ்நிலப் பகுதிகள், ஆற்றங்கரைகள் மற்றும் குளங்களின் வான் பாயும் பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அனர்த்தம் நிகழாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நிகழ்ந்தால் மீளமுடியாத பாதிப்பைத் தவிர்க்க அனைவரும் முன்னாயத்தமாக இருக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் திணைக்களங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

அபாயகரமான வீதிகள் என அடையாளப்படுத்தப்பட்ட வீதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

இது மாதிரிகள் அடிப்படையிலான எதிர்வு கூறல் என்பதால், சில விலகல்கள் இருக்கலாம் என்றாலும், மக்கள் மற்றும் நிர்வாகம் முழுமையான தயார்ப்படுத்தலுடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை