முச்சக்கர வண்டியில் தலையை வெளியே நீட்டிய முன்பள்ளி மாணவி லொறி மோதி பலி!
ஹொரணை, ரம்மணிக பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பரிதாபகரமான விபத்துச் சம்பவத்தில் முன்பள்ளி மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த மாணவி, தலையை வெளியே நீட்டியபோது வீதியில் வந்த லொறி ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்றவேளை, குறித்த முச்சக்கர வண்டியில் 8 மாணவர்கள் மற்றும் ஒரு தாய் என அளவுக்கு அதிகமானோர் பயணித்துள்ளதாகப் பொலிஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹொரணைப் பகுதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பெற்றோர்கள் மற்றும் பாடசாலை வாகனச் சாரதிகள் பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.




